
முகவரி இல்லாத பயணம்,
நான் தொலைந்தாலும் உன்னை தொலைக்கமாட்டேன்.
வெளியே தெரியாத காயம்,
நான் வலியால் துடித்தாலும் மறந்திடமாட்டேன்.
வடிவம் இல்லாத உருவம்,
நான் மறைந்தாலும் உன்னை மறக்கமாட்டேன்.
உறவு தெரியாத உணர்வு,
நான் மூச்சி விட்டாலும் உன் சுவாசம் விடமாட்டேன்.
நான் தடுமாறினாலும் உன்னை தவறவிடமாட்டேன்.
என் அருமை காதலியே!
No comments:
Post a Comment