Monday, December 27, 2010

......ஏன் உன்னை பார்த்தேன்?



விண்ணின்
மழைத்துளி போல
நீ சிந்தினாய்
எந்தன் மீது
நான் பூத்தேன்
குறிஞ்சி பூ போல
ஏன் உன்னை பார்த்தேன்
என்று உள்ளம்
கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம்
அந்த நேரத்தை நேசிக்கும். .

கைகூடாத ஆசை. . . . .?


என்னவளே. . .
உன் கைபிடித்து
அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
உன்னை
திருமணம் செய்து கொள்ள
ஆசைப்பட்டேன். . .
நீயோ!
எனக்கு
அதை பார்க்கும்
பாக்கியத்தை மட்டுமே
கொடுத்தாய்...

Sunday, December 26, 2010

உயிரையும் பறித்துவிடு...


மின்னலை பார்த்தால்
கண்ணைப் பறிக்கும்
என்பார்கள்...
நான் பார்த்த மின்னலோ
என் கண்ணை
மட்டுமல்ல
என் இதயத்தையும்
பறித்துக் கொண்டது
என் இதயத்தை
பறித்த மின்னலே
என் உயிரையும்
பறித்துவிடு...

ஒரு தலைராகம். . .!


குடை இல்லாததால்
மழையில் நனைந்து
கொண்டே செல்கிறாய்
நீ...

குடை தராத உன்
அம்மாவை திட்டுவதா
இல்லை உன்னை
நனைக்கும் மழையை
திட்டுவதா என
நினைத்து கொண்டே
மழையில் நடந்து வருகிறேன்
நான்...
உனக்கு தர தைரியமில்லாத
என் குடையோடு....!

கடைசி ஐந்து நிமிடங்கள். . .!

இதயத்தை
கல்லாக மாற்றிவிட்டு
நீ என்னோடு பேசிய
அந்த கடைசி ஐந்து நிமிடங்களை
நினைத்துப் பார்த்தால்
இப்போதும் என் கண்களில்
இரத்தம் வருகிறது. . .

தேவதை. . .


உன் பெற்றோரைப் பார்த்திருக்கிறேன்
அவர்கள் மனிதர்கள்தானே

நீ மட்டும் எப்படி
தேவதையனாய்...!

எனது கவிதை. . . ?


என்னவளே!
நீ தான் என் கவிதையின் தாயகம்

உன் கருவிழிகள் தான் அதன் பிறப்பிடம்

உன் இதயம் தான் அதன் வளர்ச்சி

உனது இடை தான் அதன் பெருக்கம்

அதன் மரணம் உனது காலடியில். . .

Saturday, December 25, 2010

என்னுள்ளே. . .


பெண்ணே! உன்னை நினைத்தும்
என் தேகத்தில்
அனல் காற்று. . .
இதயத்தில் மழைச்சாரல். . .
ஏதோ மோகம். .
ஏதோ தாகம். .
உன்னை பார்த்தவுடன். . .

Tuesday, December 21, 2010

உடல் ஊனத்தால் கஷ்டப்படுபவர்களுக்கு உதவுங்கள். . .


நான் அன்றாடம் என் அலுவலகத்துக்கு பயணிக்கும் போது சென்னை மத்திய ரயில் நிலையத்தின் அருகே உள்ள ஒரு சுரங்க வழி நடை பாதையில் ஒரு ஊனமுற்றவரை பார்ப்பேன், அவரின் தோற்றம் என்னை மிகவும் வேதனை படுத்தியது, நம் தாய்திருநாட்டின் நாணயங்களை கையில் வைத்துக் கொண்டு பேச இயலாமல், தன் கையை தரையில் அடித்துக் கொண்டு அன்றாடம் வாழ்க்கை வாழ மற்றவரை எதிர்ப்பார்க்கும் அந்த மனிதரால் நடக்க கூட இயலாமல் ஊர்ந்து தான் செல்கிறார், என்னால் தற்போது அவருக்கு உதவமுடிந்ததது பொருள் உதவி மற்றும் கனிவான பேச்சி அன்றாடம் அதை தான் செய்கிறேன். கண்ணில் கண்டிராத கடவுளுக்கு கொடுக்கும் அன்பளிப்பை, உடலால் ஊனமுற்ற நலிந்த மக்களுக்கு கொடுத்து அவர்களிடம் பெரும் ஆசிர்வாதம் கடவுளின் வரதுக்கு சமம். உடல் ஊனமுற்றோருக்கு முடிந்த உதவியை செய்து அதில் ஆனந்தம் பெறுவோம்.
அன்பே சிவம்.
!!!

இப்படிக்கு,

ஊனமுற்றோரின் வாழ்க்கை எவ்வளவு கொடிது என்பதை உணர்ந்த வாலிபன்.. ஏன் என்றல் என்னை முதுநிலை மருந்தாக்கியல் பட்டம் கஷ்டப்பட்டு வைத்து இன்று என்னை ஓர் உதவி ஆராய்ச்சியாளராக பார்த்து மகிழ்ச்சி அடையும் என் தந்தையும் ஊனமுற்றவர் தான் உடலால்...

கஷ்டப்படுபவர்களுக்கு உதவுங்கள். . .


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

Monday, December 20, 2010

வெற்றி பெறுவோம். . .



தோல்வி என்னும் முதல் படி கடந்து
நம்பிக்கை என்ற துடிப்பை பெற்று
வேகம் என்னும் படகை கொண்டு
பலவீனம் என்னும் ஆற்றை கடப்போம். . .

பலம் என்ற பாய் மரம் கொண்டு
திறன் என்னும் திசை அறிந்து
முயற்சி என்னும் பாதையை கண்டு
சிந்தனை என்னும் முடிவை அடைந்து
வெற்றி என்ற இலக்கை பெறுவோம்..

Sunday, December 19, 2010

அன்புத்தோழி !!!




"இடைவிடாது பயணித்த ரயில்பயணத்தில் என்னை கவிதை எழுத தூண்டியது அவள் நினைவு! !

என் முதல் ரயில் பயணத்திற்கு காரணமாகவும், தூண்டுதலாகவும் இருந்தவளும் அவள் தான்!!

என் காதலுக்கு உதவிய நண்பர்களுள் அவளும் ஒருத்தி!!!

நான் வாழ்க்கையை வெறுத்த தருணங்களில் எனக்குள் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொணர்ந்தது அவள் நட்பு!

என் மனதில் ஆறாத வடுவை உண்டாக்கிய மங்கையின் பெயரும் ஏழு எழுத்துக்கள் தான்!!

அந்த ஆறாத வடுவுக்கு சிறு மருந்தாக செயல் பட்ட மங்கையின் பெயரும் ஏழு எழுத்துக்கள் தான்!!

எனது தோழியின் மிகபெரிய பலம் எப்போதும் அவளை சார்தவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது தான்!!

நான் அவளிடம் வேண்டுவது ஒன்றே ஓன்று தான் கடைசி வரை தொடரும் அவளது நட்பு !!

இன்னும் புரியவில்லையா அந்த
மங்கை யார் என்று அவள் தான் எனது அன்புத்தோழி!!!

கல் நெஞ்சுக்காரி. . .


உன் கண்கள் என்னும் காந்தத்தால்
என்னை கட்டி இழுத்தாய். . .
பின்னர் தான் தெரிந்தது
உன் இதயம் இரும்பென்று. . .

என்னால் முடியாது !!


அசையாத காற்று,
அலை இல்லாத கடல்,
ஓடாத நதி,
பூக்காத மலர்,
இவையெல்லாம் இருக்கும் என்றால்?
நானும் இருப்பேன் உன்னை நினைக்காமல் . . .

அழகு. . .


உயிர்களுக்குள் மனிதன் அழகு,
மனிதனுக்குள் பெண் அழகு,
பெண்களுக்குள் நீ அழகு,
உனக்குள் எல்லாமே அழகு.

வரம் கொடுப்பாயா!!


ரதியே உன்னைக் கண்டதும் மதியிழந்தேன்...
நிலவே உன்னைப் பார்த்ததும் சொல்லிழந்தேன்...
வரம் கொடுப்பாயா உன் காதலை?
கடன் கொடுப்பாயா உன் இதயத்தை?

என்னவளின் கண்கள் . .


பெண்ணே நீ மௌன விரதம் இருந்தால்,
முதலில் உன் கண்களை மூடிக்கொள்.
உன் உதடுகளை விட,
உன் கண்கள் தான் அதிகம் பேசுகின்றன...

.............மாட்டேன். . .


முகவரி இல்லாத பயணம்,
நான் தொலைந்தாலும் உன்னை தொலைக்கமாட்டேன்.
வெளியே தெரியாத காயம்,
நான் வலியால் துடித்தாலும் மறந்திடமாட்டேன்.
வடிவம் இல்லாத உருவம்,
நான் மறைந்தாலும் உன்னை மறக்கமாட்டேன்.
உறவு தெரியாத உணர்வு,
நான் மூச்சி விட்டாலும் உன் சுவாசம் விடமாட்டேன்.
நான் தடுமாறினாலும் உன்னை தவறவிடமாட்டேன்.
என் அருமை காதலியே!

திருடி ! !


என் இதயத்தை திருடியவள் நீ,
தனிமையில் இருந்து வாடுவது நானா?

"பெயராசை"


எனக்கு பேராசையெல்லாம் எதுவும் இல்லை
உன் பெயருக்குப் பின்னால்
என் பெயர் வரவேண்டுமென்கிற
"பெயராசை" தான் உண்டு! ! !

For My Girl


The Great Poem which I've read is ur name!

The Great Painting which I've seen is ur face!

Beautiful things remind me of u!

Infact the things which remind me of u r alwayz beautiful!


There're no words to express ur beauty!

எதிரி . . .


என் கவிதைகள் தான் எனக்கு முதல் எதிரி!

ஏனென்றால்?

எழுதுவதெல்லாம் நான் !!

பேசுவதெல்லாம் அவளை பற்றி. . .

"சந்"தியா !!!


சந்தோஷத்தின் முதல் எழுத்துக்களை
உன் பெயரின் முதல் எழுத்தாக கொண்ட நீ!!
எனக்கு மட்டும் ஏன் துன்பத்தை தந்து விட்டு சென்றாய்! !

கண்ணாடி. . .


ஓயாமல் பேசும் பெண்கள் வாயாடி என்றால்!

நீ கண்ணாடி !!

உனக்காகவே . . .


யாரொடும் வாழும் வாழ்க்கை அது வேண்டாம் பெண்ணே
உயிரொடு வாழும் காலம் அது உனக்கு மட்டுமே!!!

Beauty of Love


With the Pride of Beauty, 2 beautiful eyes are striking me like typhoon. .

I can hear the burst of crackers inside me. .

New waters r flooding from breaches in the dams. .


I've got a glimpse of a poem in the crowded Place. .

I've experienced a new thing like rain drenching me in hot sun. .

I'm asking for a reply, Whether this is dream or real !!!!!

LOVE IS ENOUGH


Though the world be a-waning,
And the woods have no voice but the voice of complaining, Though the skies be too dark for dim eyes to discover The gold-cups and daisies fair blooming there under, Though the hills be held shadows, and the sea a dark wonder, And this day draw a veil over all deeds passed over, Yet their hands shall not tremble, their feet shall not falter: The void shall not weary, the fear shall not alter These lips and these eyes of the loved and the lover.