
"இடைவிடாது பயணித்த ரயில்பயணத்தில் என்னை கவிதை எழுத தூண்டியது அவள் நினைவு! !
என் முதல் ரயில் பயணத்திற்கு காரணமாகவும், தூண்டுதலாகவும் இருந்தவளும் அவள் தான்!!
என் காதலுக்கு உதவிய நண்பர்களுள் அவளும் ஒருத்தி!!!
நான் வாழ்க்கையை வெறுத்த தருணங்களில் எனக்குள் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொணர்ந்தது அவள் நட்பு!
என் மனதில் ஆறாத வடுவை உண்டாக்கிய மங்கையின் பெயரும் ஏழு எழுத்துக்கள் தான்!!
அந்த ஆறாத வடுவுக்கு சிறு மருந்தாக செயல் பட்ட மங்கையின் பெயரும் ஏழு எழுத்துக்கள் தான்!!
எனது தோழியின் மிகபெரிய பலம் எப்போதும் அவளை சார்தவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது தான்!!
நான் அவளிடம் வேண்டுவது ஒன்றே ஓன்று தான் கடைசி வரை தொடரும் அவளது நட்பு !!
இன்னும் புரியவில்லையா அந்த மங்கை யார் என்று அவள் தான் எனது அன்புத்தோழி!!!
No comments:
Post a Comment