Thursday, January 27, 2011

இன்ஜினியரிங் கல்லூரியில் சேரமுடியாமல் ஏழை மாணவர் தவிப்பு:


Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=58554

சேலம்:தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் கூடுதல் கட்டணம் கேட்பதால் ஏழை மாணவர் சேர்க்கை பெற முடியாமல் தவிக்கிறார்। கட்டண சலுகை வழங்கி உதவுமாறு கலெக்டரிடம் அவர் மனு வழங்கினார்.ஓமலூர் தாலுகா, கருப்பூர் வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன், விவசாய கூலித்தொழிலாளி. அவரது மனைவி பார்வதி. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவர்களது மகன் சரவணன்(17). நடந்து முடிந்த ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் 929 மதிப்பெண் பெற்றார். 150.25 என்ற கட்ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் அண்ணா கவுன்சலிங்கில் கல்லூரி சேர்க்கை பெற்றார்.

19 ஆயிரம் ரூபாய் கல்லூரியில் செலுத்த வேண்டும் என, கூறினர்.அதன்படி, ஒதுக்கீடு செய்யப்பட்ட திருச்செங்கோட்டில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரிக்கு மாணவர் சென்றார். அங்கு 68 ஆயிரத்து 650 ரூபாய் செலுத்துமாறு கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டது. அதில், முதல் பட்டதாரி மாணவர் என்ற அடிப்படையில் அரசின் சலுகையாக 20 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது. மீதமுள்ள 47 ஆயிரத்து 650 ரூபாயை செலுத்துமாறு கூறியுள்ளது.கூடுதல் கட்டணம் கேட்பதால் அவரது பெற்றோர், மாணவரை படிக்க வைக்க முடியாமல் திணறுகின்றனர்.


நகையை அடமானம் வைத்து ஓரளவு பணத்தை சேர்த்து விட்டாலும், கல்லூரி கேட்கும் தொகையை அவர்களால் செலுத்த முடியாத நிலை உள்ளது. சேலம் மாவட்ட கலெக்டரிடம் மாணவர் சரவணன், அவனது பெற்றோர் படிப்புக்கு உதவி கேட்டு மனு அளித்தனர். நிதி உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் சரவணனின் மொபைல் எண்- 95858 47002 தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment