வெப்பமடைதலை எதிர்கொள்ளச் சைவ உணவே சிறந்த வழி என்று கூறுகிறது. இந்த ஆய்வின் முடிவுகளைச் சூழலுக்குப் பொருத்தமானவையாக உணர்ந்த பிரிட்டிஷ் அரசு இப்போது மக்களிடம் சைவத்தை ஊக்குவிக்கத் தீர்மானித்துள்ளது. ஆனால், பெரும்பாலானோர் பூமி வெப்பமடைதலுக்குத் தீர்வாக மாற்று எரிபொருள், மாற்று ஆற்றல் மற்றும் மின்சக்தி போன்ற சிக்கலான, அதிகம் செலவு பிடிக்கிற வருங்காலத் திட்டங்களை அடுக்கிக்கொண்டிருக்க, அதற்கான வழி அவர்கள் வாயிலேயே இருக்கிறது.உணவு உட்கொள்வதன் நோக்கம் உயிர் வாழ்வதுதான். இருந்தும் இன்று நாம் உண்ணும் உணவு நமக்கு நோயையும் மரணத்தையும் தந்து பூமியின் அழிவுக்கும் வழிவகுக்கிறது.
ஏற்கனவே மருத்துவ ஆய்வுகள் இறைச்சிக்கும் புற்றுநோய், கொழுப்பு, இருதய நோய், சர்க்கரை வியாதி போன்ற இன்னும் பிற ஆட்கொல்லி நோய்களுக்கும் உள்ள தொடர்பைத் தெளிவாக நிறுவியுள்ளன. இது போதாதென்று இப்போது மறுக்க முடியாத இந்தச் சான்றும் நமக்குக் கிடைத்துள்ளது.
பூமி வெப்பமடைதல், புற ஊதாக் கதிர்களின் ஒளியிடமிருந்து பூமியைக் காக்கும் ஓசோன் படலத்தில் பசுங்கூட வாயுக்கள் (greenhouse gases) விளைவிக்கும் சேதத்தால் ஏற்படுகிறது. ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஓர் அறிக்கை, இறைச்சித் தொழில் துறைதான் வாகனங்களைவிட அதிக அளவில் பசுங்கூட வாயுக்களை வெளியிடுவதாகக் கூறுகிறது. இதில் முக்கியப் பங்காற்றுவது விலங்குகளின் கழிவிலிருந்து வெளிப்படும் மீத்தேன் வாயு. ஒவ்வொரு கிலோகிராம் மீத்தேன் வாயுவும் அதே அளவு கார்பன்டைஆக்சைடைவிடப் பூமியை 25 மடங்கு அதிக வெப்பமடையச் செய்கிறது.
இறைச்சி, உலகம் முழுவதுமுள்ள காடுகள் அழிய மிகப் பெரிய காரணம். பிரேசிலிலும் அர்ஜென்டினாவிலும் மழைக் காடுகள் இறைச்சிக்காக வளர்க்கப்படும் மந்தைகளின் மேய்ச்சல் நிலங்களாக மாற்றப்படுகின்றன. இந்தியாவில் ஆடு மாடுகளை வனப்பகுதிகளில் மேய்க்கிறார்கள்.
உலகில் கிட்டத்தட்ட 30% நிலம் கால்நடைத் தீவனவளர்ப்பிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இறைச்சி, நிலம் தவிர அதிக நீரைச் செலவழிப்பதோடு அதற்கு நச்சுத்தன்மையையும் கொடுக்கிறது. இறைச்சிக்கூடங்களின் கழிவுகள் நம் ஆறுகளைச் சீரழிக்கின்றன. தில்லியில் ஒவ்வொரு நாளும் 13,000 லிட்டர் ரத்தம் யமுனையில் கலக்கிறது!
பருவநிலை மாற்றம் என்பது எங்கோ எப்போதோ நிகழப்போவதல்ல. அதை இன்று நாம் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். பருவநிலையைக் கணிக்க முடியாமல்போனால் விவசாயம் குழம்பிப்போகும். இந்தியாவைப் போன்ற ஒரு விவசாய நாட்டிற்கு அது பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம். தீவுகளின் நிலைமை இன்னும் மோசம் - பூமி வெப்பமடைவதால் ஆர்க்டிக் பனியாறுகள் உருகிக் கடல் மட்டம் அதிகரித்துவருகிறது. இதனால் மொரீஷியஸ், மாலத்தீவுகள் போன்ற தீவு நாடுகளும் வெனீஸ் போன்ற நகரங்களும்கூட மூழ்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஓசோன் படலம் அழிந்தால் தோல் புற்றுநோய் அதிகரிக்கும். இந்தப் பிரச்சினை பற்றி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்கூடப் பேச ஆரம்பித்திருப்பதால் நம் நிலைமை மிகவும் மோசமாகத்தான் இருக்க வேண்டும்.
நன்றி: டெக்கான் க்ரானிக்கிள்
No comments:
Post a Comment